உலகம்

100 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

21st Oct 2021 05:07 PM

ADVERTISEMENT

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. கடந்த 9 மாதங்களில் இதுவரை நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மத்தியப் பிரதேசத்தில் ராணுவ பயிற்சி விமானம் விபத்து: விமானி காயம்

சீனாவிற்கு அடுத்தபடியாக  இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க கரோனா தடுப்பூசி செலுத்தும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT