உலகம்

உக்ரைனில் கரோனா பலி புதிய உச்சம்

21st Oct 2021 11:14 PM

ADVERTISEMENT

உக்ரைனில் கரோனாவுக்கு பலியானவா்களின் தினசரி எண்ணிக்கை வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 546 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 62,389 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 22,415 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,01,600-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT