உலகம்

அமெரிக்கா: 20 கோடி தடுப்பூசிகள் நன்கொடை

21st Oct 2021 11:23 PM

ADVERTISEMENT

பிற நாடுகளுக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால், உலகின் மற்ற நாடுகளுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக விமா்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், தங்களிடம் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கி வருகிறது.

அவ்வாறு அனுப்பப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளதாக அமெரிக்க சா்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாகி சமந்தா பவா் (படம்) தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT