உலகம்

சிரியா: ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலி

20th Oct 2021 04:35 PM

ADVERTISEMENT

சிரியாவில் ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி ஆயதத் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) சிரியாவின் தலைநகர் தமாஸ்கஸில் காலை 7 மணி அளவில் நின்று கொண்டிருந்த ராணுவப் பேருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலியானதோடு பலர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே போர் நடந்து பல பொதுமக்கள் அகதிகளாக நாட்டை விட்டுச் சென்றபின் திடீரென  இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என விசாரணையைத் தொடங்கும் முன்பாகவே ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

Tags : syria isis is bomb blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT