உலகம்

மருத்துவ வரலாற்றில் சாதனை; மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்

20th Oct 2021 04:03 PM

ADVERTISEMENT

இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பல ஆண்டுகளாகவே விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவ வரலாற்றில், முதன்முறையாக பன்றி சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தும்போது எவ்வித எதிர்ப்பும் ஏற்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி மருத்துவச் வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றமாகப் கருதப்படுகிறது.

இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், மனித உறுப்பு பற்றாக்குறையைப் போக்கிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த சோதனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மனிதனின் ரத்தநாளங்களுடன் பன்றியின் உறுப்பைப் பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து வயிற்றுக்கு வெளியே தொடையின் மேல் பகுதியில் அந்த சிறுநீரகம் மூன்று நாள்கள் வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. 

மனிதருக்குப் பொருத்தப்படும் சிறுநீரகத்தில் எதிர்பார்க்கப்படும் சிறுநீர் அளவு, பன்றியின் சிறுநீரகத்திலும் காண முடிந்ததாகவும், அந்த நபருக்கிருந்த மோசமான சிறுநீரக செயல்பாட்டைவிட, புதிதாக பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இதையும் படிக்கஷாருக் கானின் மகனுக்கு மருத்துவ ஆலோசனை; என்சிபி விசாரணையில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் உறுப்பு மாற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். இதில் 90,000 க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களாக தான் காத்திருக்கின்றனர். சிறுநீரகத்திற்கு சராசரியாக மூன்று முதல் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பன்றிகள், கால்சேஃப் என அழைக்கப்படுகிறது. இது யுனைடெட் தெரபியூட்டிக்ஸ் கார்ப்ஸ் ரிவிவிகர் பிரிவால் உருவாக்கப்பட்டது. இதற்கு, டிசம்பர் 2020 இல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியது. இ


 

Tags : pig kidney transplantation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT