உலகம்

இந்திய நீர்மூழ்கிக் கப்பலை சிறை பிடித்ததா பாகிஸ்தான்? சர்வதேச எல்லையில் நடந்தது என்ன?

20th Oct 2021 01:16 PM

ADVERTISEMENT

கடந்த வாரம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் கடற்படை தடுத்து நிறுத்தியதாக அந்நாடு செவ்வாய்கிழமையன்று தெரிவித்திருந்தது.

ஆனால், இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்ததாகக் கூறப்படும் இடம், பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ளது என கடல்சார் போக்குவரத்து குறித்தி விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது நம்பத்தகுந்த தகவல் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "பாகிஸ்தான் கடல் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தூரம் வரை அந்நாட்டின் கடல் எல்லை நீண்டுள்ளது. இதுபற்றி வெளியான தகவலின்படி, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாகக் கூறப்படும் இடம், கராச்சி துறைமுகத்திலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் உள்ளது. இது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பகுதிக்கு அப்பால் அமைந்துள்ளது" என்றார்கள்.

இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, செவ்வாய்கிழமை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம், இந்திய நீர்மூழ்கிக் கப்பலை அக்டோபர் 16ஆம் தேதி கண்டுபிடித்தது. அன்றே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் வர விடாமல் பாகிஸ்தான் கடற்படை நீர்மூழ்கி கப்பலை தடுத்து நிறுத்தியது.

ADVERTISEMENT

இதையும் படிக்ககுஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

நிலவும் பாதுகாப்பு காரணங்களால், நாட்டின் கடல் எல்லை பகுதிகளை பாதுகாக்கும் வகையில் கடுமையான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்.

பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம், இந்திய நீர்மூழ்கிக் கப்பலால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறை. கடைசியாக, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : India Pakistan Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT