உலகம்

அசுர வளர்ச்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்

20th Oct 2021 04:22 PM

ADVERTISEMENT

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு புதிதாக 44 லட்சம் பயனர்கள் வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல தனியார் ஓடிடி தளமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது நெட்பிளிக்ஸ். பல்வேறு மொழிப்படங்களும் சுவாரஸ்யமான கதைகளுடன் இத்தளத்தில் கிடைப்பதால் பயனர்களின் விருப்பமான ஓடிடி தளமாகவும் நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது.

இதையும் படிக்க | சூர்யாவின் 'ஜெய் பீம்' பட டிரெய்லர் குறித்து வெளியான தகவல்

இந்நிலையில் கடந்த காலாண்டில் மட்டும் புதிதாக 44 லட்சம் பயனர்கள் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வருவாய் மற்றும் பயனர்கள் எண்ணிக்கையிலும் அதிகரித்த நெட்பிளிக்ஸ் தளம் பின் சரியத் தொடங்கியது. எனினும் தற்போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பிரியங்கா காந்தியின் கார் தடுத்து நிறுத்தம்

கடந்த காலாண்டைக் காட்டிலும் 16 சதவிகித வருவாயை ஈட்டியுள்ள நெட்பிளிக்ஸின் வருவாய் நடப்பு காலாண்டில் மட்டும் 75 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

புதிதாக வெளியான செக்ஸ் எஜுக்கேசன், மணி ஹைஸ்ட் மற்றும் ஸ்குவாட் கேம் உள்ளிட்ட தயாரிப்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | உத்தரகண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல்

இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 14.5 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது 21.4 கோடி பயனர்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Netflix OTT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT