உலகம்

சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் கீதா கோபிநாத்

20th Oct 2021 12:27 PM

ADVERTISEMENT

பொருளாதார நிபுணர் கீதா போகிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகவுள்ளார். அதன் பின்னர், ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையில் மீண்டும் இணையவுள்ளார்.

கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்தவந்த விடுமுறை     ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச நிதியத்தில் அவரால் மூன்றாண்டுகள் பணியாற்ற முடிந்தது. சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி துறையில் தலைவராக அவர் பணியாற்றிவந்தார்.

இந்த ஆராய்ச்சித்துறைதான், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிடுகிறது. இதன்மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. கீதா கோபிநாத்துக்கு புகழாரம் சூட்டியுள்ள சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமரிசன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்துள்ளார்.

நிதியத்திற்கு அவர் ஆற்றிய பங்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. எளிமையாக சொன்னால், சர்வதேச நிதியத்தின் பணியல் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. பெரும் மந்தநிலைக்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்லும்போது அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் சர்வதேச நிதி மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தைப் பற்றிய அவரின் ஆழமான அறிவிலிருந்து நாங்கள் பெரிதும் பயனடைந்தோம்.

ADVERTISEMENT

இதையும் படிக்ககுஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

கோவிட் -19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. உகந்த காலநிலை தணிப்புக் கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார்" என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, சர்வதேச நிதியத்தின் தலைவராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.

Tags : IMF gita gopinath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT