உலகம்

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பலி

19th Oct 2021 11:13 AM

ADVERTISEMENT

நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர். 

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் நேற்று (அக்-18) அடையாளம் தெரியாத நபர்கள் சந்தைப் பகுதியை அடித்து நொறுக்கியதுடன் 30 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : nigeria
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT