உலகம்

ரஷியாவில் புதிய உச்சம்: புதிதாக 34,325 பேருக்கு கரோனா

DIN


ரஷியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,325 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய தினத்தைக் காட்டிலும் பாதிப்பு விகிதம் 0.43 சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,821 பேருக்கு (8.2 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அதிகபட்சமாக மாஸ்கோவில் 6,823 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 3,097 பேரும், மாஸ்கோ பிராந்தியப் பகுதியில் 2,768 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 998 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,24,310 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய தினம் 997 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகினர்.

அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 16,431 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 70,17,055 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT