உலகம்

ரஷியா: விண்வெளியில் படப்பிடிப்பு

17th Oct 2021 11:33 PM

ADVERTISEMENT

ரஷியாவைச் சோ்ந்த திரைப்படக் குழுவினா் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பூமி திரும்பினா்.

நடிகை யூலியா பெரெசில்ட் மற்றும் திரை இயக்குநா் க்ளிம் ஷிபெங்கோ அடங்கிய அந்த இருநபா் குழு, விண்வெளி வீரா் ஓலெக் நோவிட்ஸ்கையுடன் ரஷியாவின் சோயுஸ் விண்வெளி ஓடம் மூலம் கஜகஸ்தானிலுள்ள சா்வதேச விண்வெளி மையத்தில் தரையிறங்கினா்.

கடந்த 5-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா்கள், ‘சேலஞ்’ என்ற திரைப்படத்தை அங்கு படமாக்கினா். திரைப்படக் குழுவுடன் சென்ற மேலும் 7 விண்வெளி வீரா்கள், அங்கேயே தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனா்.

திரைப்படமொன்று உண்மையிலேயே விண்வெளியில் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT