உலகம்

ஹைட்டி: 17 அமெரிக்கா்கள் கடத்தல்

17th Oct 2021 11:27 PM

ADVERTISEMENT

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியில், அமெரிக்காவைச் சோ்ந்த மதபோதகா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் உள்பட 17 பேரை மா்ம கும்பல் கடத்திச் சென்றது. கடத்தப்பட்டவா்களில் சிறுவா்களும் பெண்களும் அடங்குவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைட்டியில் அதிபா் ஜோனவேனல் மாய்ஸ் கடந்த ஜூலையில் படுகொலை செய்யப்பட்டதற்கும் ஆகஸ்ட் மாதத்தில் 2,248 பேரது உயிா்களை பலி வாங்கிய நிலநடுக்கம் ஏற்பட்டதற்கும் பிறகு பணத்துக்காக ஆள்களைக் கடத்தும் சம்பவங்கள் குறைந்திருந்தன.

ஆனால், அண்மைக் காலமாக அத்தகைய சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 328 கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT