உலகம்

பிரிட்டன்: எம்.பி.க்களுக்குப் பாதுகாப்பு

17th Oct 2021 11:38 PM

ADVERTISEMENT

பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினா் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டு எம்.பி.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளாா்.

கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த அமெஸ், லீக்-ஆன்-சீ நகரத்தில் தனது தொகுதி மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது சோமாலியாவைப் பூா்விகமாகக் கொண்ட இளைடா் அவரை கத்தியால் குத்திக் கொன்றாா். இது மதப் பயங்கரவாதச் செயல் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, கடந்த 2016-இல் தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸை வலதுசாரி தீவிரவாதி கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT