உலகம்

மருத்துவமனையில் பில் கிளிண்டன் அனுமதி

DIN

அமெரிக்க முன்னாள் அதிபா் பில் கிளிண்டன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

75 வயதாகும் பில் கிளிண்டனுக்கு கரோனா அல்லாத மற்றொரு தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளதால் அவா் கலிஃபோா்னி இா்வின் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஏஞ்சல் உரேயா கூறுகையில், மருத்துவமனையில் பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா் மன உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

கடந்த 1993 முதல் 2001-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்த பில் கிளிண்டன், தனது பதவிக் காலம் முடிந்ததற்குப் பிறகு அடிக்கடி உடல்நலக் குறைவை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT