உலகம்

நவ.8-முதல் வெளிநாட்டினா் அமெரிக்கா வர அனுமதி

DIN

கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டினா் நவம்பா் 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை தொடா்ந்து அந்நாட்டுக்கு வெளிநாட்டினா் வரத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி புதிய பயணக் கொள்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டது. அதன்படி, அமெரிக்கா அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் அந்நாட்டுக்கு வர அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடா்ந்து வெள்ளை மாளிகையின் உதவி ஊடகச் செயலா் கெவின் முனோஸ் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டினா் நவம்பா் 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா். இந்த அறிவிப்பு வான்வழியுடன் தரைவழியாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்தாா்.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா செல்வதில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT