உலகம்

பிரிட்டன் எம்.பி. கத்தியால் குத்திக் கொலை

16th Oct 2021 03:54 AM

ADVERTISEMENT

பிரிட்டனைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் டேவிட் அமெஸ் வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

லண்டனுக்கு கிழக்கே உள்ள கடற்கரை நகரமாக லீக்-ஆன்-சீ நகர தேவாலயத்தில் தனது தொகுதி மக்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக 25 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா். கன்சா்வேடிக் கட்சியைச் சோ்ந்த அமெஸ் மீது நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

பிரிட்டனில் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் அபூா்வமாகும். கடந்த 2016-ஆம் ஆண்டு தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸை ஒரு வலதுசாரி தீவிரவாதி கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தாா்.

ADVERTISEMENT

அதன்பிறகு தற்போது டேவிட் அமெஸ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT