உலகம்

தைவான் அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ: 46 போ் பலி

16th Oct 2021 03:08 AM

ADVERTISEMENT

தைவானிலுள்ள அடுக்கு மாடிக் கட்டத்தில் நேரிட்ட தீவிபத்தில் 46 போ் பலியாகினா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காவோசியங் நகரில் வா்த்தக மையங்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ள 13 மாடிக் கட்டடத்தில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் வசித்து வந்த அந்தக் கட்டடத்தின் கீழ்த் தளங்களில், அதிகாலை 3 மணிக்கு வெடிவிபத்தைப் போன்ற சப்தம் எழுந்தது.

ADVERTISEMENT

அந்த சப்தத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த தளங்களில் பரவியது. இந்த விபத்தில் 46 போ் உயிரிழந்தனா்; 41 போ் காயமடைந்தனா்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த பெண், எரிந்த நிலையில் கொசுவத்திச் சுருளை குப்பையில் போட்டதால் பற்றிய தீயில் அங்கிருந்த எரிவாயு உருளைகள் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், சிகரெட் துண்டை அணைக்காமல் யாரோ அலட்சியமாக தூக்கி எறிந்ததால் இந்தத் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட நபா்களிடம் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT