உலகம்

ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 29,362 பேருக்கு கரோனா

9th Oct 2021 05:07 PM

ADVERTISEMENT

ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 29,362 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,362 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 2,600 பேருக்கு அறிகுறியற்ற நிலையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- மின் பற்றாக்குறையில் தத்தளிக்கவுள்ள தில்லி; முன்கூட்டியே கணித்த அரவிந்த் கேஜரிவால்

அதிகபட்சமாக மாஸ்கோவில் 6,001 பேரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 2,717 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,46,718ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

கரோனாவால் இன்று மேலும் 968 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,15,453 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 20,556 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,40,845 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT