உலகம்

பிரேசிலில் 6 லட்சத்தைக் கடந்த கரோனா பலி

9th Oct 2021 03:56 PM

ADVERTISEMENT

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது.  
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் பிரேசில் உள்ளது. கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,15,50,730ஆக உயர்ந்துள்ளது. 

இதையும் படிக்க- முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் வாகன அணி குறைப்பு

அதேசமயம் கரோனாவுக்கு நேற்று மேலும் 615 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 6,00425ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிரேசிலை பொறுத்தவரை 111 நாள்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT