உலகம்

சீனா: கனமழையால் 16,000 பேர் பாதிப்பு

4th Oct 2021 03:05 PM

ADVERTISEMENT

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் 16,000 பேர் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க | கரோனா குறைந்துள்ளது; மழைக்கால நோய் பரவ வாய்ப்பு: மா. சுப்பிரமணியன்

கடந்த சில நாட்களாக சீனாவின் லயோனிங் மாகாணத்தில் கடுமையான கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.

சில இடங்களில் புயலும் வெள்ளப்பெருக்கும் அதிகமாக இருப்பதால் 16,583 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பேரிடர் மீட்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடியிருக்கும் 4,500 பேரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்  பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags : China flood
ADVERTISEMENT
ADVERTISEMENT