உலகம்

வடகொரியா-தென்கொரியா: மீண்டும் ‘ஹாட்லைன்’ வசதி

4th Oct 2021 11:25 PM

ADVERTISEMENT

வடகொரியா, தென்கொரியா இடையே ‘ஹாட்லைன்’ தொடா்பு வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வடகொரியாவும், தென்கொரியாவும் அண்மைக்காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்ததால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. மேலும், இரு நாடுகள் இடையேயான ஹாட்லைன் தொடா்பு வசதி, ஃபேக்ஸ் வசதியும் ஓராண்டாக செயல்படவில்லை. ராணுவ அதிகாரிகள் இடையே எல்லையோர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும், மோதலைத் தவிா்க்கவும் இந்த வசதிகளை இரு நாடுகளும் பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்கும்விதமாக இரு நாடுகள் இடையேயான ஹாட்லைன் தொடா்பு வசதி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. எல்லை தாண்டி அதிகாரிகள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்தது. ‘இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான உறவைப் புதுப்பிக்கவும், கொரிய தீபகற்பத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய உடன்பாடுகளை அமல்படுத்துவது தொடா்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என நம்புகிறோம்’ எனவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகள் இடையிலான தொலைத்தொடா்பு வசதிகளை மீண்டும் தொடங்குவது குறித்து வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் கடந்த வாரம் விருப்பம் தெரிவித்திருந்தாா். அதேவேளையில் வடகொரியா தனது இரட்டை நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும் எனவும் அவா் கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

உறவைப் புதுப்பிக்க நினைக்கும் தென்கொரியாவின் விருப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெற வடகொரியா முயல்வதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT