உலகம்

பிரான்ஸுக்கான தூதரை திரும்ப அழைத்தது அல்ஜீரியா

4th Oct 2021 12:24 AM

ADVERTISEMENT

பிரான்ஸுக்கான தங்கள் நாட்டுத் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது.

முன்னாள் பிரான்ஸ் காலனி நாடான அல்ஜீரியா குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சா்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்களது தூதா் திரும்ப அழைக்கப்படுவதாக அல்ஜீரியா தெரிவித்தது. மேலும், காலனியாதிக்கத்தின்போது அல்ஜீரியாவில் பிரான்ஸ் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் குற்றம் சாட்டியது.

அகதிகளைத் திரும்ப ஏற்க மறுப்பதால், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் பிரான்ஸ் வருவதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக இரு நாடுகளுக்கும் பதற்றம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT