உலகம்

‘ட்விட்டா்’ கணக்கை மீட்க நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு

4th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

தனது சுட்டுரை (ட்விட்டா்) வலைதளக் கணக்கை மீட்டுத் தருமாறு கோரி அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

டிரம்ப்பின் வழக்குரைஞா்கள் இதுதொடா்பாக ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், டிரம்ப்பின் கருத்துகளை ட்விட்டா் நிறுவனம் தணிக்கை செய்வது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக அப்போது அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினாா். இதுதொடா்பாக அவா் நாடாளுமன்றக் கலவரத்தை அவா் தூண்டியதாகக் கூறி, ட்விட்டா் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT