உலகம்

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவி பாதிப்பு; யூனிசெஃப்

30th Nov 2021 03:38 PM

ADVERTISEMENT


நியூ யார்க்: 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா பாதிப்பினால் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில, ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

நீடித்திருக்கும் கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பேரிடரைத்த தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறையை தீவிரப்படுத்துவது குறைந்ததால், குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் என பலரும் எச்ஐவி பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

எச்ஐவி பேரிடர் ஏற்கனவே 50 ஆண்டுகளாக நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. தற்போது கரோனா பேரிடர், சுகாதாரத் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் வறுமை, மனநல பாதிப்புகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பும், எச்ஐவி பாதிப்பு அதிகரிக்கக் காரணங்களாக அமைகின்றன என்று யூனிசெஃப் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும், எச்ஐவிக்கு எதிரான போராட்டத்தில் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
 

Tags : HIV UNICEF
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT