உலகம்

மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்ட எம்பி

28th Nov 2021 11:14 AM

ADVERTISEMENT

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர், மருத்துவமனைக்கு சைக்களில் சென்று பிரசவம் பார்த்து கொண்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

பசுமைக் கட்சியை சேர்ந்த அவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், "முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது.

நாங்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக அதிகாலை 2 மணிக்குச் எழுந்தபோது என் பிரசவ வலி அவ்வளவு மோசமாக இல்லை. எங்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல 2-3 நிமிடங்கள் ஆகும். இருந்தபோதிலும், அங்கு சென்று 10 நிமிடங்களிலேயே பிரசவ வலி அதிகரித்தது.

 

ADVERTISEMENT

ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கரஷிய ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம்: உக்ரைன் அதிபா்

ஜெண்டர், அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்த அவர், நியூசிலாந்துக்கு 2006ஆம் குடிபெயர்ந்தார். போக்குவரத்து தொடர்பான விவகாரங்களில் பசுமைக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக உள்ள அவர், 2018ஆம் ஆண்டும், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று தனது முதல் குழந்தையை பெற்று கொண்டார்.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி தீவு நாடான நியூசிலாந்தில், பல பணிவான அரசியல் தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக, அந்நாட்டு பிரதமராக பொறுப்பு விகித்துவரும் ஜெசிந்ததா ஆர்டெர்ன், பதவியில் இருக்கும்போதே மகப்பேறு விடுப்பு எடுத்து, ஐக்கிய நாடுகளின் கூட்டம் நடைபெற்றபோது தனது மூன்று மாத குழந்தையை அழைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.


 

Tags : New Zealand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT