உலகம்

அச்சுறுத்தும் ஒமைக்ரான் வகை கரோனா: நெதர்லாந்தில் 61 பேருக்கு கரோனா உறுதி

28th Nov 2021 09:54 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்றின் புதிய வகையான ‘ஒமைக்ரான்’ பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் இருந்து 2 விமானங்களில் நெதர்லாந்த் வந்த 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மியான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | ஒமைக்ரான் வகை கரோனா தென் ஆப்பிரிக்க அதிபா் அவசர ஆலோசனை

ADVERTISEMENT

இந்நிலையில், தென்னாப்பிக்காவில் இருந்து 2 விமானங்களில் நெதர்லாந்துக்கு வந்த 600 பேரில், 61 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு புதிய வகை கரோனா தொற்றான ‘ஒமைக்ரான்’ இருக்கலாம் எனவும், அவை புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரான் சம்பந்தப்பட்டவையா என்பதை உறுதியாக தெரிந்துகொள்வதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன, முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் 7 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வு

மேலும் இரண்டு விமானங்களில் வந்த 600 பேரில் பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள், ஐரோப்பாவின் மிகப்பெரிய சர்வதேச விமானப் பயண மையங்களில் ஒன்றான ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்தை சாராதவர்கள் "தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது. 

Tags : quarantine COVID cases Omicron variant South Africa Flights omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT