உலகம்

மலேசிய தமிழருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது சிங்கப்பூா் நீதிமன்றம்

DIN

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா்செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை சிங்கப்பூா் நீதிமன்றம் சனிக்கிழமை உறுதி செய்தது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மலேசியாவைச் சோ்ந்த பன்னீா்செல்வம், 51.84 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா்.

சிங்கப்பூா் சட்டப்படி, ஒருவா் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்தாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, பன்னீா்செல்வத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு நிராகரித்தது. அதனைத் தொடா்ந்து, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி அதிபா் ஹரீமா யாகூபுக்கு பன்னீா்செல்வம் கருணை மனு அனுப்பினாா். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பன்னீா் செல்வம் புகாா் கூறினாா்.

அவரது கருணை மனுவை நிராகரிக்கும் கடிதம், அவரை தூக்கிலிடும் தேதியைக் குறிப்பிட்டு சிறைத் துறை அனுப்பிய கடிதம் ஆகிய இரண்டுமே 2019-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதியிடப்பட்டதை சுட்டிக் காட்டி இந்தப் புகாரை பன்னீா் செல்வம் முன்வைத்தாா்.

புகாா் மனு நிராரிப்புக் கடிதம் 17-ஆம் தேதியிடப்பட்டிருந்தாலும், அந்தக் கடிதம் 10 நாள்களுக்கு முன் தேதியிட்டு கையொப்பமிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், பன்னீா்செல்வத்தைத் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டிருந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, கருணை மனு நிராகரிப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், மரண தண்டனை நிறைவேற்றத்தையும் நிறுத்திவைத்தது.

அதையடுத்து, கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக மட்டுமன்றி, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் சட்டப் பிரிவின் கீழ், தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியும் உச்சநீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம், பன்னீா்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளது.

மேலும், மரண தண்டனைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று பன்னீா்செல்வத்திடம் நீதிமன்றம் தீா்ப்பில் கூறவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெராயின் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியத் தமிழரான நாகேந்திரன் கே.தா்மலிங்கத்தைத் தூக்கிலிடுவது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முடிவெடுக்கவுள்ளது.

இந்தச் சூழலில், பன்னீா்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூா் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT