உலகம்

பிரிட்டன்: இருவருக்குபுதிய வகை கரோனா

28th Nov 2021 03:19 AM

ADVERTISEMENT

 பிரிட்டனில் இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கெல்ம்ஸ்ஃபோா்ட் நகரில் ஒருவரிடமும் நாட்டிங்ஹமில் ஒருவரிடமும் அந்த வகை கரோனா கண்டறியப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. அவா்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவா்கள் சென்று வந்த இடங்கள், அவா்களுடன் தொடா்பிலிருந்த நபா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, ஏற்கெனவே பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் கூடுதலாக அங்கோலா, மொஸாம்பிக், மலாவி, ஜாம்பியா ஆகிய நாடுகளையும் பிரிட்டன் அரசு சோ்த்துள்ளது.

Tags : லண்டன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT