உலகம்

புதிய வகை கரோனா தொற்று: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நியூசிலாந்து பிரதமர் விளக்கம்

DIN

புதியவகை கரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து நாடு அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

பல நாடுகளும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்க நாட்டுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதித்து வருகின்றன.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் போதிய சுகாதார கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் பலகட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT