உலகம்

புதிய வகை கரோனா குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

26th Nov 2021 12:57 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா நிபுணர்கள் மற்றும் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா எப்படி செயல்படுகிறது என்பதிலேயே புதிய வகை கரோனா தாக்கத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இணைய வழியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விவரித்துள்ள உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ், "கவலை என்னவென்றால், பல மாறுதல்கள் தென்படும்போது, ​​அது வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். திறமைமிக்க தடுப்பூசிகளில் இந்த மாறுபாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும்" என்றார்.

முன்பிருந்த வகைகளை காட்டிலும் இந்த உருமாறிய கரோனா வித்தியாசமாக இருப்பது தெளிவாக தெரிகிறது என இரண்டு தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் உயிர் தகவலியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் துலியோ டி ஒலிவேரா வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

புதிய வகை கரோனா குறித்து லண்டனை மையமாக கொண்டு இயங்கும் யுசிஎல் மரபியல் நிறுவனத்தின் இயக்குநர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் இதுகுறித்து கூறுகையில், "இது ஒரு நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரின் நாள்பட்ட நோய்த்தொற்றிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம், அவர் சிகிச்சை அளிக்கப்படாத எய்ட்ஸ் நோயாளியாக இருக்கலாம்" என்றார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கஹாங்காங்குக்கு பரவிய ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா

இதன் தீவிர தன்மை குறித்து விவரித்துள்ள தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபீகல்-டிங், "தென்னாப்பிரிக்காவில் பரவல் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா முழுவதும் திடீரென பரவ தொடங்கிய இது பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு வாரத்தில் 1% நேர்மறையிலிருந்து திடீரென்று 30% ஆக மாறுகிறது.

புதிய வகை கரோனா முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு, வைரஸின் புரத கூர்முனைகளில் மாறுதல்களை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, தென்னாப்பிரிக்காவில் அது வேகமாக பரவிவருவதாக இம்பீரியல் கல்லூரி லண்டனில் தொற்றுநோய் நிபுணராக உள்ள நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

 


 

Tags : new variant south africa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT