உலகம்

இங்கிலாந்து: படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலி

25th Nov 2021 03:04 PM

ADVERTISEMENT

ஐரோப்பா நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் - இங்கிலாந்து கடல் பகுதிக்குள் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உள்பட 31 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலிஷ் கணவாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று(நவ.24) இரவு கவிழ்ந்தது.

இதில் பெண்கள் ,குழந்தைகள் உள்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாயமானவர்களை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் தேடி வருகிறார்கள்.

ADVERTISEMENT

Tags : England boat accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT