உலகம்

இலங்கை: படகு விபத்தில் 6 மாணவா்கள் பலி

24th Nov 2021 12:43 AM

ADVERTISEMENT

இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள குறிஞ்சிக்கேணி நகரிலிருந்து கின்னியா நகருக்கு கடல் வழியாக அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாணவா்கள் உள்பட 17 போ் மீட்கப்பட்டனா். இரு நகரங்களுங்களையும் இணைப்பதற்கான பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதமாவதால், படகு மூலம் பயணம் செய்ய வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Sri Lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT