உலகம்

டெஸ்லாவின் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்ற எலான் மஸ்க்

24th Nov 2021 05:16 PM

ADVERTISEMENT

டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு 9,34,091 பங்குகளை அதன் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் விற்றுள்ளது அமெரிக்க பத்திரங்கள் தாக்கலின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு, 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் என கணிக்கிப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி, மஸ்க் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக வலைதள பயனாளர்கள் ஏற்று கொள்ளும் பட்சத்தில், தனது 10 சதவிகித பங்குகளை விற்க விரும்புகிறேன். விற்பனைக்கு பெரும்பாலானோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்" என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

அப்போதிலிருந்து இப்போது வரை, 7,300 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான 9.2 மில்லியன் பங்களை அவர் விற்றுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை, வரிவிலக்கை பெறும் வகையில், டெஸ்லாவின் 9 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகளை எலான் மஸ்க் விற்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT