உலகம்

ஸ்வீடனில் முதல் பெண் பிரதமராகும் மக்தலேனா ஆண்டா்சன்

24th Nov 2021 04:29 PM

ADVERTISEMENT

ஸ்வீடனின் புதிய பிரதமராக மக்தலேனா ஆண்டா்சனை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டின் சமூக ஜனநாயக கட்சித் தலைவராக உள்ளவர் ஸ்டெஃபான் லோஃப்வென். இவர் ஸ்வீடன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த நிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாா். 

இதையும் படிக்க | கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

அதனைத் தொடர்ந்து பிரதமா் பதவியை ஸ்டெஃபான் ராஜிநாமா செய்தாா். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்தலேனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய நிலையில் மக்தலேனா ஆண்டா்சனை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. 349 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 175 ஆதரவு தேவை எனும் நிலையில் 117 பேர் ஆண்டர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 174 பேர் அவருக்கு எதிராகவும், 57 வாக்களிக்காமலும், ஒருவர் பேரவைக்கு வராமலும் இருந்துள்ளார்.

இதையும் படிக்க | ஈக்வடார்: சிறைக் கலவரத்தில் 300 பேர் பலி

ஸ்வீடன் நாட்டின் அரசியலமைப்பின்படி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க பெருவாரியான உறுப்பினர்களின் எதிர்ப்பு பதிவாக வேண்டும். 175 உறுப்பினர்களின் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகாததால் புதிய பிரதமராக மக்டலெனா ஆண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமையை மக்தலேனா ஆண்டா்சன் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT