உலகம்

வெள்ளை மாளிகை வந்தது கிறிஸ்துமஸ் மரம்!

23rd Nov 2021 01:01 PM

ADVERTISEMENT

 

கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறுஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக் கொண்டார்.

கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக ஆண்டுதோறும் கிறுஸ்துமஸ் மரம் குதிரை வண்டியில் கொண்டு வரப்படும்.

அதேபோல், 2021ஆம் ஆண்டு கிறுஸ்துமஸ் பண்டிகைக்காக வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 18.5 அடி உயர கிறுஸ்துமஸ் மரத்தை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஜில் பைடன் பேசுகையில், “அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் விடுமுறையை கொண்டாடுங்கள்” என்றார்.

இந்த நிகழ்வின்போது, அமெரிக்க அதிபரின் மகன் ஹண்டர் பைடன், மருமகள் மெலிஸா மற்றும் பேரக்குழந்தை உடன் இருந்தனர்.

 

Tags : Jill Biden Christmas Tree White House
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT