உலகம்

‘டென்மார்க், ஜெர்மனி செல்ல வேண்டாம்’: சொந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

23rd Nov 2021 06:29 PM

ADVERTISEMENT

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக அமெரிக்கர்கள் டென்மார்க் மற்றும் ஜெர்மனி செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

உலகில் பல நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து: 45 பேர் பலி

அந்த வகையில் ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலை சுட்டிக்காட்டி அந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் கரோனா தொற்று பரவல் மோசமான நிலையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | இஸ்ரேலில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மேலும் இவ்விரு நாடுகளுடன் ஆஸ்திரியா, பிரிட்டன், பெல்ஜியம், கிரீஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து, ரூமானியா, அயர்லாந்து மற்றும் செக் குடியரசு நாடுகளிலும் கரோனா பரவல் மோசமான நிலையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags : Coronavirus USA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT