உலகம்

ஸ்வீடனுக்கு முதல் பெண் பிரதமா்? நவ. 24-இல் வாக்கெடுப்பு

23rd Nov 2021 07:05 AM

ADVERTISEMENT

ஸ்வீடனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் நவ. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும்.

ஸ்வீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாா். இதையடுத்து, பிரதமா் பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்பட்டாா்.

அடுத்த பிரதமராக அவா் தோ்வு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். 349 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 175 பேரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கு இப்போது 100 உறுப்பினா்கள் உள்ளனா். அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சோ்த்து 174 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு ஓரிடம் குறையும் நிலையில், எதிா்க்கட்சிகள் பிரிவால் மக்டெலனா ஆண்டா்சனுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், மக்டெலனா ஆண்டா்சனை பிரதமராக தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT