உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரை கரம் பிடித்த மலாலா

10th Nov 2021 11:29 AM

ADVERTISEMENT

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், அவரது இணையர் அசீர் ஆகியோர் தங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் இன்று தெரிவித்துள்ளனர். பெண் கல்விக்காக தொடர்ந்து போராடிவரும் மலாலா, அசீர் ஆகியோரின் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மலாலா ட்விட்டர் பக்கத்தில், "எனது வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான நாள். அசீரும் நானும் வாழ்க்கை முழுவதும் இணையர்களாக இருக்க திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவைக் கொண்டாடினோம். உங்கள் பிரார்த்தனைகளுக்காக காத்து கொண்டிருக்கிறோம். முன்னோக்கி செல்லும் பயணத்தில் ஒன்றாக நடப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

மலாலா, பாகிஸ்தானில் பிறந்தவர். பெண்கள் சார்பாக அவர்களின் கல்விக்காக பகிரங்கமாக பொதுவெளியில் குரல் கொடுத்த அவரை, தலிபான்கள் 2012ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டனர். பர்மிங்காமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக, அவர் உயிர் தப்பினார். அப்போது அவருக்கு வயது 11. 

இதனை தொடர்ந்து, பெண் கல்விக்காக தொடர்ந்து போராடிவரும் மலாலா, "ஒரு பெண் குழந்தையை வரவேற்பது எப்போதும் கொண்டாட்டத்திற்கான காரணமாக இருப்பதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

2014 ஆம் ஆண்டில், பல மாத அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவர் தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் உள்ள அவர்களின் புதிய வீட்டுக்கு சென்றார். தனது தந்தையின் உதவியுடன், அவர் மலாலா அறக்கட்டளையை நிறுவினார். அவரின் சமூக பணியை அங்கீகரிக்கும் வகையில், 2014ஆம் டிசம்பர் மாதம், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மிக சிறிய வயதில், நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகினார் மலாலா. அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து 2020 இல் பட்டம் பெற்றார்.

 

Tags : Malala
ADVERTISEMENT
ADVERTISEMENT