உலகம்

தென் ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு!

5th Nov 2021 04:58 PM

ADVERTISEMENT

இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரிய விருதான ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாமன் கல்கட் எனும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டு தோறும் புக்கர் பரிசிற்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய ‘தி பிராமிஸ்’ என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் ‘தி பிராமிஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுத் தொகையான ரூ.50.21 லட்சம் டாமன் கல்கட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக டாமன் 2 முறை புக்கர் பரிசின் இறுதிச் சுற்று வரை தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT