உலகம்

இங்கிலாந்து: மகாத்மா காந்திக்கு நினைவு நாணயம் வெளியீடு

5th Nov 2021 11:39 AM

ADVERTISEMENT

இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் , ‘ இந்த நாணயத்தில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ’என் வாழ்க்கையே என் செய்தி’ என்ற பொன்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது. இந்தியனான நான் தீபாவளியன்று இந்த நாணயத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனத் தெரிவித்தார்.

தங்கத்தாலும் வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று(நவ.4) முதலே விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

 

Tags : England Mahatma Gandhi rishi sunak
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT