உலகம்

ருமேனியா: 50 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி

5th Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

ருமேனியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 463 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,087-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 8,268 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,93,532-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ருமேனியாவில் இதுவரை14,69,303 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,74,142 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,877 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT