உலகம்

மேற்குவங்கத்தில் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி

1st Nov 2021 04:04 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேற்குவங்கத்தில் தீபாவளி, காளிபூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய பண்டிகை நாள்களில் 2 மணி நேரம்  மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு முதலில் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்நிலையில் கரோனா பரவல் காரணமாகவும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் பண்டிகை கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்க, விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அக்.29 ஆம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில், கரோனா பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாசை கருத்தில்கொண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளின்போதும் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்துப் பட்டாசுகளும் விற்பனை செய்ய, வெடிக்கத் தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கமேற்குவங்கத்தில் எல்லாப் பட்டாசுகளுக்கும் தடை: கொல்கத்தா உயர்நீதிமன்றம்

இந்நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சில பொதுமக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று நீதிபதி கன்வில்கர் தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதுபோல மேற்குவங்கத்தில் காற்றின் தரம் சரியான அளவில்(moderate) இருக்கும் இடங்களில் மட்டும் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம். அதுபோல பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என்று கூறி மேற்குவங்கத்தில் பட்டாசுக்கு அனுமதி வழங்கியுள்ளார். 

இதையும் படிக்கதீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: மேற்கு வங்க அரசு

ADVERTISEMENT
ADVERTISEMENT