உலகம்

துருக்கி, சிலி நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு

29th May 2021 12:05 PM

ADVERTISEMENT


பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சில நாடுகளில் கரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

துருக்கயில் வெள்ளிக்கிழமை புதிதாக 7,77, பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 52,28,322 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் துருக்கியில் 164 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 47,134 ஆக உயர்ந்துள்ளது.

சிலியில், வெள்ளிக்கிழமை புதிதாக 8,680 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுதான், 2020 மார்ச் மாதம் கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு பதிவாகும் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், சிலியில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,61,381 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Turkey Covid-19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT