உலகம்

கரோனா: உலகம் முழுவதும் 35.25 லட்சம் பேர் பலி

28th May 2021 09:02 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,25,066 -ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின்இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வரும் நிலையில், நாளுக்‍கு நாள் தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை  35,25,066 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்‍கையைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்‍கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 16,96,25,911 பேர் பாதிக்கட்டுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 15,13,33,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,47,67,168 பேர் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 97,940 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

ADVERTISEMENT

கரோனா பலி எண்ணிக்‍கையில் அமெரிக்‍கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

தடுப்பூசி கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT