உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 53 பேர் பத்திரமாக மீட்பு

27th May 2021 03:45 PM

ADVERTISEMENT

 

லாகோஸ்: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு பல நாள்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 53 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்ஃபாரா மாகாணத்தின் பாதுகாப்பு மற்றும் உள் விவகாரத் துறை ஆணையர் அபுபக்கர் டௌரன் இது குறித்து கூறுகையில், மாகாண அரசின் தொடர் அமைதிப் பேச்சுவார்த்தையின் பலனாக, மாகாண தலைநகர் குசௌ பகுதியில், கடத்தப்பட்டிருந்த 53 பேரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட அனைவரும், கடந்த வாரம் புங்குடு என்ற பகுதியில் கடத்தல்காரர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : Nigeria
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT