உலகம்

‘கரோனா தொற்றால் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம்’: உலக சுகாதார நிறுவனம்

21st May 2021 05:38 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை பாதிப்பில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் 60 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்படாத கரோனா பாதிப்புகள், மருத்துவமனை பற்றாக்குறை, பலி எண்ணிக்கை மற்றும் இன்ன பிற காரணங்களால் இந்த இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகம் முழுவதும் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள கருத்து பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT