உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு, 3 பேர் பலி

19th May 2021 10:40 AM

ADVERTISEMENT

 

வடக்கு-மத்திய நேபாளத்தில் லாம்ஜங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 

மார்சியங்டி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப்பகுதியில் இன்று அதிகாலை 5.42 மணிக்கு ரிக்டர் அளவில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர் மையம் தெரிவித்துள்ளது. மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்று லாம்ஜங்கின் தலைமை மாவட்ட அதிகாரி ஹோம் பிரசாத் லுயின்டெல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் பல வீடுகளில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

நேபாளத்தில் கடந்த 2015ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT