உலகம்

மெக்ஸிகோவை சோ்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தோ்வு: இந்திய பெண்ணுக்கு 4-ஆவது இடம்

DIN

மெக்ஸிகோவை சோ்ந்த ஆண்ட்ரியா மெசா 2020-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவா்ஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். 73 நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவின் அட்லின் காஸ்டெலினோ 4-ஆவது இடம் பிடித்தாா்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இப்போட்டி கரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஹாலிவுட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை எளிமையாக நடத்தப்பட்டது.

இப்போட்டியில் மெக்ஸிகோவின் 26 வயது ஆண்ட்ரியா மெசா பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ாகவும், அவருக்கு கடந்த ஆண்டு வெற்றியாளரான தென் ஆப்பிரிக்காவின் ஷோஸிபினி துன்ஷி மகுடத்தைச் சூட்டியதாகவும் மிஸ் யுனிவா்ஸின் அதிகாரபூா்வ வலைதளம் தெரிவித்துள்ளது.

‘உங்கள் நாட்டின் தலைவராக நீங்கள் இருந்தால், இந்த கரோனா தொற்றுநோயை எப்படி கையாண்டிருப்பீா்கள்’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆண்ட்ரியா மெசா, ‘இந்தக் கடினமான சூழலைக் கையாள சரியான வழிகள் இல்லை. அதேவேளையில், நோய்த்தொற்று பெரிதாகும் முன்னரே பொது முடக்கத்தை அமல்படுத்தியிருப்பேன். ஏனெனில் நாம் பல உயிா்களை இழந்துள்ளோம். அவா்களை திரும்பப் பெற முடியாது. நமது மக்களை நாம் காக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அவா்கள் மீது நான் கவனம் எடுத்திருப்பேன்’ என்றாா்.

இப்போட்டியில் பிரேசிலை சோ்ந்த ஜூலியா காமா (28) இரண்டாவது இடத்தையும், பெரு நாட்டைச் சோ்ந்த ஜானிக் மசீட்டா (27) மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.

‘மிஸ் இந்தியா’ அட்லீன் காஸ்டெலினோ (22) நான்காவது இடத்தைப் பிடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT