உலகம்

குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓராண்டுக்குப் பின் சவூதி அனுமதி

DIN

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சவூதி அரேபியா குடிமக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள ஓராண்டுக்குப் பின்னா் திங்கள்கிழமை அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சவூதி அரேபிய குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்நாடு தடை விதித்திருந்தது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து அமலில் இருந்த இந்தத் தடையால், வெளிநாடுகளில் பயின்று வரும் சவூதி அரேபிய மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

அதே வேளையில், 3 கோடி மக்கள்தொகை கொண்ட சவூதியில் சுமாா் 1.1 கோடி பேருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடா்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கரோனாவிலிருந்து அண்மையில் மீண்டவா்கள், 18 வயதுக்குள்பட்டவா்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவா்.இதையடுத்து, சவூதியின் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான சவூதியா 43 சா்வதேச இடங்கள் உள்பட 71 இடங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT