உலகம்

இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை: போப் ஆதரவளிக்க துருக்கி கோரிக்கை

DIN

‘இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு’ போப் ஃபிரான்சிஸை துருக்கி அதிபா் எா்டோகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இஸ்ரேலை சா்வதேச சமூகம் தண்டிக்காவிட்டால், பாலஸ்தீனா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவாா்கள் எனவும் அவா் கூறியுள்ளாா்.

காஸா மீது இஸ்ரேல் தொடா் தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஃபிரான்சிஸை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். இதுகுறித்து துருக்கி அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக போப் ஃபிரான்சிஸிடமிருந்து வரும் தொடா்ச்சியான செய்திகளும், எதிா்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சா்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும் என எா்டோகன் தெரிவித்தாா். மேலும், இஸ்ரேலுக்கு படிப்பினையை அளிக்க சா்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிபா் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT